என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஸ்மார்ட் டி.வி.
நீங்கள் தேடியது "ஸ்மார்ட் டி.வி."
சியோமி நிறுவனம் இந்தியாவில் 15 மாதங்களில் சுமார் இருபது லட்சம் Mi டி.வி. மாடல்களை விற்பனை செய்துள்ளது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் டி.வி.க்களை விற்பனை செய்ய துவங்கியதில் இருந்து இதுவரை சுமார் இருபது லட்சத்திற்கும் அதிக Mi டி.வி. மாடல்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் சியோமி தனது Mi டி.வி.க்களை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. சியோமியின் முதல் டி.வி. 55-இன்ச் Mi டி.வி. 4 என்ற பெயரில் அறிமுகமானது. சியோமியின் Mi டி.வி. மாடல்கள் ப்ளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் விற்பனை செய்யப்படுகிறது.
What? 😮@MiTVIndia sold #2MillionMiTVs in just 14 months.
— Mi India (@XiaomiIndia) May 17, 2019
This is phenomenal. Wouldn't have been possible without your support, Mi fans. Thank you.🙏
RT with hashtag #2MillionMiTVs to spread the word and win Mi goodies. pic.twitter.com/BZS63kJWSr
ஸ்மார்ட் டி.வி.க்கள் மட்டுமின்றி சியோமி நிறுவனம் மொபைல் அக்சஸரிகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் பல்வேறு மின்சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் 15 மாதங்களில் சியோமி நிறுவனம் சுமார் 20 லட்சம் Mi டி.வி. மாடல்களை விற்பனை செய்திருக்கிறது.
Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43, Mi எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. 4ஏ 43, Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 32 மற்றும் Mi எல்.இ.டி. டி.வி. 4சி ப்ரோ 32 உள்ளிட்டவை சியோமியின் பிரபல டி.வி. மாடல்களாக இருக்கின்றன. இந்தியாவில் சியோமி நிறுவனம் தற்சமயம் எட்டு Mi டி.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அன்பாக்ஸ் மேஜிக் ஸ்மார்ட் டி.வி. சீரிஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #SmartTV
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அன்பாக்ஸ் மேஜிக் சீரிஸ் மாடலின் கீழ் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட் டி.வி.யில் பெர்சனல் கம்ப்யூட்டர், மியூசிக் சிஸ்டம், ஹோம் கிளவுட், லைவ் காஸ்ட் மற்றும் டு-வே ஷேரிங் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
புதிய ஸ்மார்ட் டி.வி.க்களில் இதுவரை சாம்சங் தனது டி.வி.க்களில் வழங்கிடாத வசதிகளை வழங்கியிருப்பதால் பயனருக்கு முற்றிலும் புதுவித அனுபவம் கிடைக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இவை ஹை டெஃபனிஷன் டிஸ்ப்ளேக்களில் அல்ட்ரா பிக்ஸ் தொழில்நுட்பம் முதல் அல்ட்ரா ஹை டெஃபனிஷன் 4K மாடல்களில் கிடைக்கிறது.
பெர்சனல் கம்ப்யூட்டர்: புதிய ஸ்மார்ட் டி.வி. முழு கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம். இதனால் பிரவுசிங் மட்டுமின்றி கிளவுட் சேவையில் இருந்து நேரடியாக டாக்யூமென்ட்களை உருவாக்குவது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இத்துடன் லேப்டாப்பை ஸ்மார்ட் டி.வி.யில் இணைய வசதியின்றி வயர்லெஸ் முறையில் மிரர் செய்யலாம்.
மியூசிக் சிஸ்டம்: இந்த வசதியை கொண்டு டி.வி.யை விர்ச்சுவல் மியூசிக் சிஸ்டம் போன்று பயன்படுத்தலாம். இதனுடன் தனியே ஸ்பீக்கர் இணைத்து ஆடியோ அனுபவத்தை மேலும் மேம்படுத்தலாம்.
இத்துடன் ஹோம் கிளவுட் சேவையை கொண்டு ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வயர்லெஸ் முறையில் இணைய வசதியின்றி டி.வி.யில் இருக்கும் யு.எஸ்.பி. டிரைவில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி புதிய ஸ்மார்ட் டி.வி.யில் லைவ் காஸ்ட், சாம்சங் ஸ்மார்ட் ஹப் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் விலை ரூ.24,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டி.வி. மாடல்கள் அதிகபட்சம் 82-இன்ச் வரை கிடைக்கிறது.
நோபிள் ஸ்கியோடோ எனும் டி.வி. பிராண்டு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி.க்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #SmartLite
இந்தியாவில் தொலைகாட்சி பெட்டிகளுக்கான சந்தை சமீப காலங்களில் அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. சந்தையில் களமிறங்கும் புதிய டி.வி. பிராண்டுகள் தங்களது தொலைகாட்சி மாடல்களின் விலையை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் டி.வி. பிராண்டு நோபிள் ஸ்கியோடோ. இந்தியாவில் ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்திருக்கும் இந்த பிராண்டு தனது 24-இன்ச் மாடலின் விலையை ரூ.6,999 என்றும் 32-இன்ச் மாடலின் விலையை ரூ.8,999 என்றும் நிர்ணயம் செய்துள்ளது.
புதிய டி.வி.க்களின் குறைவான கட்டணத்திலேயே ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, விநியோகம் மற்றும் இன்ஸ்டாலேஷன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் புதிய டி.வி.க்களில் வைபை, லேண் கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் யூடியூப், மிராகாஸ்ட், வெப் பிரவுசர் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் டி.வி.யில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.
ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி. 24 இன்ச் (NB24YT01) மற்றும் 32-இன்ச் (NB32YT01) மாடல்களில் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் ஸ்கிரீன் மற்றும் 20 வாட் சவுண்ட் அவுட்புட் வழங்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், ஒரு யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகின்றன.
புதிய டி.வி.க்கள் இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. பயனர்கள் இவற்றை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக வாங்க முடியும். இந்தியாவுக்கென உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த டி.வி.க்கள் மாசு மூலம் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய டி.வி.க்கள் குறைந்தளவு மின்சக்தியை பயன்படுத்த ஏதுவாக பிரத்யேக பேக்லிட் செட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வு மற்றும் சியோமி போன்ற பிராண்டுகள் தங்களது குறைந்த விலை டி.வி.க்களை அறிமுகம் செய்து பிரபலமாகி வரும் நிலையில், நோபிள் ஸ்கியோடோ மற்றும் ஷின்கோ போன்ற பிராண்டுகள் தங்களது புதிய டி.வி.க்களை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றன. முன்னதாக ஷின்கோ நிறுவனம் 39-இன்ச் டி.வி.யினை ரூ.13,990 விலையில் அறிமுகம் செய்தது.
சியோமி நிறுவனம் தனது 4ஏ ப்ரோ 49-இன்ச் ஃபுல் ஹெச்.டி. ஆண்ட்ராய்டு டி.வி.யின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Xiaomi
சியோமி நிறுவனம் தனது Mi எல்.இ.டி. டியவிய 4ஏ ப்ரோ 49 இன்ச் மாடலின் விலையை ரூ.1,000 குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ரூ.31,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டி.வி.யின் விலை முன்னதாக ஜனவரி மாதத்தில் ரூ.1000 குறைக்கப்பட்டது. அந்த வகையில் இதே டி.வி.யின் விலை தற்சமயம் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டிருக்கிறது. Mi டி.வி. மாடல் அறிமுகமான ஆறு மாதங்களுக்குள் இருமுறை விலை குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சியோமி நிறுவனம் தனது Mi டி.வி. 4 ப்ரோ 55 இன்ச் 4K டி.வி.யின் விலையை ரூ.2000 குறைப்பதாக அறிவித்தது. இரு டி.வி. மாடல்களின் விலைகுறைப்புக்கு சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த 4K டி.வி.க்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.
விலை குறைப்பு மூலம் வாடிக்கையாளர்களை கவர சியோமி முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் வரும் வாரங்களில் சியோமி இதேபோன்ற விலை குறைப்புக்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 49 இன்ச் மாடல் தற்சமயம் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான், Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
தாம்சன் நிறுவனம் இந்தியாவில் 40-இன்ச் அளவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. #SmartTV
தாம்சன் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் பிரபல நிறுவனமாக அறியப்படும் தாம்சன் தனது புதிய ஸ்மார்ட் டி.வி.யை யு.டி.9 என அழைக்கிறது. 40-இன்ச் அளவில் கிடைக்கும் புதிய 4K ஸ்மார்ட் டி.வி. மார்ச் 16 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய தாம்சன் யு.டி.9 40-இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவின் முதல் 4K (3840x2160 பிக்சல்) கொண்ட முதல் ஸ்மார்ட் டி.வி.யாகும். புதிய ஸ்மார்ட் டி.வி.யில் HDR10 மற்றும் 20W ஆடியோ அவுட்புட் வழங்குகிறது. இந்த எல்.இ.டி. டி.வி.யில் மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள் மற்றும் 60Hz ஸ்டான்டர்டு ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட் டி.வி. அம்சத்திற்கென ஆறு செயலிகல் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் யூடியூப் செயலியும் அடங்கும். இந்த செயலியை கொண்டு 4K வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். இந்த டி.வி.யின் பிரைட்னஸ் ரேட்டிங் 550 நிட்ஸ் ஆகும். கூடுதலாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்டவையும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.
புதிய தாம்சன் ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. ஏற்கனவே தாம்சன் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் வேரியண்ட்களை தாம்சன் விற்பனை செய்து வருகிறது. புதிய தாம்சன் யு.டி.9 4K ஸ்மார்ட் டி.வி. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன் விலை இந்தியாவில் ரூ.20,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப்-எண்ட் டி.வியின் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தாம்சன் டி.வி.க்களை விற்பனை செய்து வரும் எஸ்.எஸ்.பி.எல். நிறுவனம் 1990 முதல் சந்தையில் பல்வேறு ரக டி.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SmartTV
இந்தியாவின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி.யை டெல்லியை சேர்ந்த சமி இன்ஃபர்மேடிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சமி SM32-K5500 ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி. விலை இந்தியாவில் ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் டெலிவரி மற்றும் ஜி.எஸ்.டி. கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை.
32-இன்ச் ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இதனால் இதில் அனைத்து ஸ்மார்ட் செயலிகளும் சீராக இயங்கும். இந்த எல்.இ.டி. டி.வி.யில் 32-இன்ச் 1366x786 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் 10 வாட் ஸ்பீக்கர்கள், எஸ்.ஆர்.எஸ். டால்பி டிஜிட்டல் மற்றும் 5 பேண்ட் சவுண்ட் தரம் வழங்குகிறது.
இந்த டி.வி.யில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து பாகங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதால் சுமார் 200 பேருக்கு வேலை கிடைத்திருப்பதாக சமி இன்ஃபர்மேடிக்ஸ் தெரிவித்திருக்கிறது. மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை சமி 32 இன்ச் ஆண்ட்ராய்டு டி.வி.யில் 512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருக்கிறது.
சமி 32 இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.யில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் அவரவர் விரும்பும் செயலிகளை கூகுள் பிளேயில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை ஆண்ட்ராய்டு டி.வி.யில் இரு ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. போர்ட்கள், ஒரு ஏ.வி. அவுட் போர்ட் மற்ரும் வீடியோ இன்புட் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று சமி SM32-K5500 ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி. மாடலின் விலை ரூ.4,999 தான். எனினும் இந்த டி.வி.யை சமி ஆப் கொண்டு தான் வாங்க வேண்டும். சமி செயலியில் டி.வி.யை முன்பதிவு செய்யும் போது டி.வி.யை டெலிவரி செய்ய உங்களது இருப்பிட விவரங்களை கேட்கும்.
இந்தியா முழுக்க சமி ஸ்மார்ட் டி.வி.யை டெலிவரி செய்வதற்கான கட்டணம் ரூ.1,800 என்றும் இதனுடன் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி கூடுதலாக செலுத்த வேண்டும். அந்த வகையில் டி.வி.யை வாங்கும் போது மொத்த கட்டணம் ரூ.8,000 ஆகும்.
“இந்தியாவின் ஊரக பகுதிகளில் வசிக்கும் நடுத்தர மற்றும் ஏழ்மை குடும்பங்களை சேர்ந்தவர்களும் ஸ்மார்ட் டி.வி. அனுபவத்தை பெறச் செய்யும் நோக்கில் ரூ.4,999 விலையில் வழங்க முடிவு செய்தோம்,” என சமி இன்ஃபர்மேடிக்ஸ் நிறுவன தலைவர் அவினாஷ் மேத்தா தெரிவித்தார். #SmartTV
சியோமி நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #Xiaomi #MiLEDTV4XPRO55
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. சமீபத்தில் சியோமி நிறுவனம் தனது Mi டி.வி. 4ஏ 32 இன்ச் மற்றும் Mi டி.வி. 4சி 32 ப்ரோ மாடல்களின் விலையை குறைத்தது.
இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மற்றும் Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச்:
சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலில் 55-இன்ச் 4K UHD HDR 10-பிட், 4840x2160 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த டி.வி.யில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ARM கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் மற்றும் மாலி 450 GPU வழங்கப்பட்டுள்ளது.
அழகிய வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த யு.ஐ. கொண்டிருக்கும் Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலில் சிறப்பான அனுபவம் கிடைக்கும். மெட்டாலிக் கிரே வடிவமைப்பு கொண்டிருப்பதால் டி.வி. பார்க்க பிரீமியம் தோற்றத்தில் 11 எம்.எம். அளவில் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.
ஆடியோ அனுபவத்தை பொருத்தவைர லாஸ்லெஸ் FLAC ஆடியோ ஃபார்மேட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 பட்டன்களை கொண்ட Mi ரிமோட் மற்றும் ப்ளூடுத், பிரத்யேக வாய்ஸ் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதை கொண்டு டி.வி. மற்றும் செட் டாப் பாக்ஸ்களில் சேனல்களை மாற்றிக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த டி.வி. ஓ.எஸ். மற்றும் பேட்ச் வால் ஓ.எஸ். கொண்டு இயங்குகிறது. டைனமிக் பேக்கிரவுண்டு மற்றும் ஸ்கிரீன் ஆஃப் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்பில்ட் பிளே ஸ்டோர், க்ரோம்காஸ்ட் மற்றும் யூடியூப் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கிறது.
சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச்:
இந்த டி.வி.யில் ஃபிளாக்ஷிப் குவாட்-கோர் 64 பிட் அம்லாஜிக் சிப்செட், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. 3 HDMI போர்ட்கள், 3 யு.எஸ்.பி. போர்ட், ஏ/வி, வைபை, ஈத்தர்நெட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சக்திவாய்ந்த 20 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் DTS கோடெக் வசதி கொண்டிருக்கிறது. 55 இன்ச் மாடலை போன்று இந்த டி.வி.யிலும் இன்பில்ட் பிளே ஸ்டோர், க்ரோம்காஸ்ட் மற்றும் யூடியூப் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
விலை மற்றும் விற்பனை:
சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலின் விலை இந்தியாவில் ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அறிமுகமான Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடலின் விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ஜனவரி 15 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எல்.ஜி. நிறுவனம் சுருட்டக்கக்கூடிய வசதி கொண்ட சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது. #CES2019 #LGCES2019
எல்.ஜி. நிறுவனம் தனது சுருட்டக்கக்கூடிய சிக்னேச்சர் OLED ரக டி.வி. ஆர் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. இந்த டி.வி. மாடல்களின் ப்ரோடோடைப் பதி்ப்புகளை அறிமுகம் செய்திருந்தது.
தற்சமயம் எல்.ஜி. அறிமுகம் செய்திருக்கும் சுருட்டக்கக்கூடிய சிக்னேச்சர் OLED டி.வி.க்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் விற்பனைக்கு வருகிறது. மற்ற ஸ்மார்ட் டி.வி.க்கள் போன்று இல்லாமல், எல்.ஜி.யின் புதுவித சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது திரையை சுருட்டி வைக்கும் வசதியை வழங்குகிறது.
புதிய எல்.ஜி. சிக்னேச்சர் டி.வி. மாடல் பார்க்க சிறிய பெட்டி போன்று காட்சியளிக்கிறது, பின் டி.வி.யை ஆன் செய்ததும் திரை பெட்டியில் இருந்து மெல்ல வெளியே வரும் படி உருவாக்கப்பட்டுள்ளது. திரை சுருட்டப்பட்டு இருந்தாலும், காட்சிகள் மிகவும் தெளிவாக இருக்கும் படி அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது.
அலெக்சா மற்றும் ஏர்பிளே 2 போன்ற பல்வேறு அம்சங்களுடன் கிடைக்கும் எல்.ஜி. சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் தற்சமயம் 65 இன்ச் அளவில் மட்டும் கிடைக்கிறது. எனினும் இதனை மூன்று விதங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலாவதாக ஃபுல் வியூ ஆப்ஷனில் பெரிய திரை, ஏ.ஐ. பிக்சர் மற்றும் சவுண்ட் செட்டிங்ஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
இரண்டாவது ஆப்ஷன் லைன் வியூ. இந்த ஆப்ஷனில் டி.வி. பாதி அளவில் வெளியே தெரியும். பயனர்கள் இதில் கடிகாரம் மோட் செட் செய்து நேரம், வானிலை அல்லது ஃபிரேம் மோட் மூலம் குடும்ப புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்போனில் இருந்து >ஷேர் செய்து பார்க்க முடியும். மூன்றாவது ஆப்ஷனான சீரோ வியூ திரை முழுமையாக உள்ளேயே இருக்கும். எனினும், பயனர்கள் இசையை டால்பி அட்மோஸ் ஆடியோ தரத்தில் அனுபவிக்க முடியும்.
இதுவரை எல்.ஜி.யின் புதிய சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலின் விலையை அறிவிக்கவில்லை. புதிய சுருட்டக்கூடிய டி.வி. தவிர எல்.ஜி. நிறுவனம் க்ரிஸ்டல் சவுண்ட் ஸ்கிரீன் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்தது. இதனுடன் 88 இன்ச் 8K OLED, 65 இன்ச் 8K OLED, ஒலியெழுப்பும் திறன் கொண்ட 65 இன்ச் 4K OLED ஸ்கிரீன் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது.
முன்னதாக இந்த தொழில்நுட்பம் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8K OLED ஸ்கிரீன் 3.2.2-சேனல் டால்பி அட்மோஸ் ஆடியோவை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
சியோமி இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் அந்நிறுவனம் புதிய ஸ்மார்ட் டி.வி. ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. #Xiaomi #SmartTV
சியோமி இந்தியா புதிதாக ஸ்மார்ட் டி.வி. ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை புதிய டீசர் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சியோமியின் புதிய ஸ்மார்ட் டி.வி. ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.
புதிய ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அந்நிறுவனம் 65 இன்ச் அளவில் 4K தரத்தில் ஹெச்.டி.ஆர். வசதி கொண்ட ஸ்மார்ட் டி.வி.யினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் என இருவித அளவுகளில் 4K ஸ்மார்ட் டி.வி. மாடல்களை ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட் டி.வி. சியோமியின் விலை உயர்ந்த மாடலாக இருக்கும். புதிய ஸ்மார்ட் டி.வி.க்கான டீசருடன் #TheBiggerPicture எனும் ஹேஷ்டேக் இடம்பெற்றிருக்கிறது.
Watching all the action on a small screen? What's your excuse? #TheBiggerPicture unveiling on 10th Jan, 11 AM. Stay tuned. pic.twitter.com/ql1jLgGCan
— Mi TV India (@MiTVIndia) January 5, 2019
இதுவே பெரிய டி.வி. மாடல் ஒன்று வெளியாக இருப்பதை தெரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் Mi டி.வி. 4 65-இன்ச் மாடல் ஏற்கனவே சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் இந்த டி.வி. விலை 5999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.62,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் சியோமியின் புதிய டி.வி. விலை ரூ.70,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகமான Mi டி.வி. 4 ப்ரோ சீரிஸ் போன்று சியோமியின் புதிய Mi டி.வி. மாடல்களும் ஆண்ட்ராய்டு டி.வி. இயங்குதளம், ஸ்மார்ட் ரிமோட் மற்றும் வாய்ஸ் சர்ச் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவன Mi எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. #Xiaomi #GST
சியோமி நிறுவன சாதனங்களின் விலை சமீப மாதங்களில் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் Mi எல்.இ.டி. டி.வி. மாடல்களின் விலை நவம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக விலை அதிகரிக்கப்பதாக சியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய ஆண்டு துவக்க தினமான இன்று, சியோமி தனது Mi எல்.இ.டி. டி.வி. மாடல்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.
விலை குறைப்புக்கு பின் ஸ்மார்ட் டி.வி.க்களின் புதிய விலை:
சியோமி Mi எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. 4ஏ விலை ரூ.12,499 (ரூ.1,500 குறைப்பு)
சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4சி விலை ரூ.13,999 (ரூ.2,000 குறைப்பு)
சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 49 விலை ரூ.30,999 (ரூ.1,000 குறைப்பு)
இந்தியாவில் மின்சாதன பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 28% இல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட் டி.வி. மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை குறைப்பு காரணமாக சியோமி ஸ்மார்ட் டி.வி.க்களின் விற்பனை புத்தாண்டு மற்றும் பண்டிகை காலக்கட்டத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய Mi எல்.இ.டி. மாடல்களின் புதிய விலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
எல்.ஜி. நிறுவனம் 'பாய்' போன்று சுருட்டி வைத்துக் கொள்ளும் வகையிலான தொலைகாட்சி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #LG #TV
எல்.ஜி. நிறுவனம் பெரிய திரை கொண்ட புதிய டி.வி. மாடல்களை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய டி.வி. மாடல்கள் 'பாய்' போன்று சுருட்டி வைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய டி.வி. மாடலில் 65 இன்ச் அளவில் சுருட்டக்கூடிய திரை கொண்டிருக்கும் என்றும், இதில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய பட்டனை க்ளிக் செய்ததும் திரை கீழ் இருந்து மேலே எழும்பும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் OLED ஸ்கிரீன்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், படங்கள் அதிக துல்லியமாக தெரியும் என்றும் இவை வழக்கமான எல்.சி.டி. ஸ்கிரீன்களை விட எளிமையாக மடிக்கக்கூடியதாக இருக்கிறது.
எல்.ஜி. நிறுவனத்தின் சுருட்டக் கூடிய தொலைகாட்சி மாடல்கள் அந்நிறுவனத்திற்கு விற்பனை அளவில் ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீன நிறுவங்களுடனான போட்டியை எதிர்கொள்ளவும் உதவும் என கூறப்படுகிறது. தென்கொரிய நிறுவனமான எல்.ஜி. எதிர்கால தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
சீயோல் நகரில் உள்ள எல்.ஜி. ஆராய்ச்சி மையத்தில் சுருட்டக்கூடிய டி.வி.யின் ப்ரோடோடைப் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. பயன்படுத்தாத போது, பெட்டியில் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு வழங்குகிறது.
எல்.ஜி. தனது சுருட்டக் கூடிய டி.வி. மாடல்களை ஏற்கனவே அறிமுகம் செய்தது. எனினும், 2019 வாக்கில் வர்த்தக ரீதியில் இந்த டி.வி. மாடல்களின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து எல்.ஜி. சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
சமீபத்தில் வெளியான தகவல்களின் படி தொலைகாட்சி சந்தையில் OLED ரக பேனல்களை கொண்ட டி.வி. மாடல்கள் வெறும் 1.1 சதவிகிதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது என தெரியவந்துள்ளது. எல்.சி.டி. ரக டி.வி.க்கள் சந்தையில் 98 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு வாக்கில் OLED டி.வி. மாடல்களின் விநியோகம் 70 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #oneplus
இந்தியாவில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை குறைந்த விலையில் விற்பனை செய்து முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கும் ஒன்பிளஸ், அடுத்ததாக ஸ்மார்ட் டி.வி. மாடல்களை விற்பனை செய்ய இருக்கிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் டி.வி. மாடல்களின் வெளியீட்டு விவரங்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் ஒன்பிளஸ் டி.வி. மாடல்களை 2020ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பீட் லௌ தெரிவித்தார். ஸ்மார்ட் டி.வி. மாடல்களும் ஃபிளாக்ஷிப் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் அதிக தரமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்பிளஸ் தனது டி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் ஸ்மார்ட் டி.வி. வெளியாகும் முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும் பீட் லௌ தெரிவித்திருக்கிறார். புது ஸ்மார்ட் டி.வி. மாடல்களும் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என பீட் லௌ தெரிவித்திருக்கிறார்.
தற்சமயம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் வெளியாகும் போது ஒன்பிளஸ் டி.வி. மாடல்கள் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என அமேசான் இந்தியாவின் மூத்த துணை தலைவர் மற்றும் இந்தியாவுக்கான மேலாளர் அமித் அகர்வால் தெரிவித்தார்.
“அமேசான் வலைதளத்தில் டி.வி. மாடல்கள் அதிக வளர்ச்சி பெற்று வருகிறது. இதன் காரணமாக டி.வி. பிரிவில் அதிகளவு முதலீடு செய்து வருகிறோம். இதனுடன் டெலிவரி செய்யப்படும் போதே டி.வி.க்களை இன்ஸ்டால் செய்யும் வசதியை துவங்கி இருக்கிறோம். விநியோகம் செய்வதில் அமேசான் முழு வீச்சில் செயல்பட்டு, ஒன்பிளஸ் டி.வி. வெளியாகும் இடங்களில் விற்பனையை ஊக்குவிக்க முயற்சி செய்யும்ம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
ஒன்பிளஸ் டி.வி. மாடல் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஏற்கனவே ஒன்பிளஸ் வலைதள பக்கங்களில் இருந்து வெளியான விவரங்களில் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டி.வி. பிரீமியம் ஃபிளாக்ஷிப் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் ஆடியோ மற்றும் வீடியோ அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. #oneplus
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X